இயற்கை விவசாயத்தை விரிவாக்க விவசாயிகளுக்கு ஊக்க தொகை

நாகை,நவ.13: இயற்கை விவசாயத்தை விரிவாக்க ஊக்க தொகைகள் வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் பிரவீன்பிநாயர் தெரிவித்துள்ளார். இயற்கை விவசாயத்தை விரிவாக்க விவசாயத்தில் அதிக அளவு ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்துவதால் மண்ணின் வளம் குறைந்து மலட்டு தன்மை ஏற்பட்டு சுற்றுச்சூழல் அதிக அளவு பாதிக்கப்படுகிறது. ரசாயன உரத்தை அதிக அளவில் பயன்படுத்துவதால் காய்கறி மற்றும் பழங்களில் நச்சுத்தன்மை அதிக அளவு படிந்து விடுகின்றது. இதனை உட்கொள்ளும் மனிதர்களுக்கு உடல் உபாதைகள் மற்றும் நோய்களும் ஏற்படுகின்றன.

இதை தவிர்க்க இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க தோட்டக்கலை துறைக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கீரை விவசாயம் செய்ய ரூ.250 மற்றும் வெண்டை, கத்திரி, தக்காளி ஆகியவை பயிரிட ஊக்கத் தொகை ரூ.3 ஆயிரத்து 750 வழங்கப்பட உள்ளது. இயற்கை முறையில் விவசாயம் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் சேர அருகில் உள்ள தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: