அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் ஏற்பாடுகள் தீவிரம் தூத்துக்குடிக்கு நாளை வருகை தரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

கோவில்பட்டி, நவ. 10: தூத்துக்குடிக்கு நாளை வருகை தரும் முதல்வர் எடப்பாடிக்கு சிறப்பான  வரவேற்பு அளிப்பது என கோவில்பட்டியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  வளர்ச்சித் திட்டப்பணிகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்திற்கு தூத்துக்குடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை (11ம் தேதி) வருகைதரும் நிலையில் அவருக்கு வரவேற்பு கொடுப்பது குறித்து அதிமுக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

 அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை வகித்தார். சின்னப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் அன்புராஜ், கருப்பசாமி, அய்யாத்துரை பாண்டியன், வினோபாஜி, மாவட்ட ஊராட்சி  தலைவர் சத்யா, கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், துணைத்தலைவர் பழனிசாமி, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள்  தங்க மாரியம்மாள், சந்திரசேகர், கோவில்பட்டி ஆவின் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், முன்னாள் யூனியன் துணை சேர்மன் சுப்புராஜ், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் கணேஷ்பாண்டியன், ஜெ. பேரவை நகரச் செயலாளர் ஆபிரகாம் அய்யாத்துரை, மாணவர் அணி நகரச் செயலாளர் விநாயகா முருகன், ஜெ. பேரவை மாவட்ட பொருளாளர் வேலுமணி,

வர்த்தக அணி மாவட்டச் செயலாளர் ராமர், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்டச் செயலாளர் சவுந்தராஜன், ஜெ. பேரவை செயலாளர் செல்வகுமார், வேலுமணி, போடுசாமி, அருணாசல சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், தூத்துக்குடியில் நாளை (11ம்தேதி) விழாவை முடித்து விட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதுநகர் செல்லும் வழியில் குறுக்கு சாலை வழியாக கோவில்பட்டி வருகிறார். அப்போது குறுக்குச் சாலையில் முன்னாள் எம்எல்ஏ மோகன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிப்பது. எட்டயபுரத்தில் சின்னப்பன் எம்எல்ஏ தலைமையில் உற்சாக வரவேற்பு அளிப்பது. கோவில்பட்டியில் சட்டமன்ற தொகுதி அலுவலகம் முன் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் உற்சாக வரவேற்பு அளிப்பது.

இதில் நகரச் செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் அன்புராஜ், அய்யாத்துரை பாண்டியன், வினோபாஜி, கருப்பசாமி பங்கேற்று சிறப்பான வரவேற்பு அளிப்பது. முதல்வர் வருகையையொட்டி கோவில்பட்டி திட்டங்குளத்தில் இருந்து ரயில் நிலையம் வரை சாலையின் இருபுறமும் கொடி, தோரணங்கள், டிஜிட்டல் பேனர்கள் வைப்பது. சாலையின் இருபுறமும் பொதுமக்கள், நிர்வாகிகள் திரளாக நின்று முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Related Stories: