குதிரையாறு அணையில் நாளை தண்ணீர் திறப்பு

திண்டுக்கல், நவ. 10: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று விடுத்துள்ள அறிக்கை: திண்டுக்கல் மாவட்டம், பழநி வட்டம், குதிரையாறு அணையிலிருந்து இடது, வலது பிரதான கால்வாய் மற்றும் பழைய பாசன பரப்புக்கு நாளை (நவ. 11) முதல் 2021 மார்ச் 3ம் தேதி வரை 120 நாட்கள் பாசன காலத்திற்கு உரிய இடைவெளியில் நாளொன்றிற்கு 41 கன அடி வீதம், 228.10 மில்லியன் கனஅடி தண்ணீரை திறந்து விட உத்தரவிட்டுள்ளேன். இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 5, 231.59 ஏக்கர் திருப்பூர் மாவட்டத்தில் 882.27 ஏக்கர் ஆக மொத்தம் 6,113.86 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Related Stories: