அமைச்சர் காமராஜ் ஆய்வு கொரடாச்சேரியில் குதிரைவாலி சாகுபடி குறித்து பயிற்சி

நீடாமங்கலம், நவ.9: நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலம் சிறுதானியங்களை மீள கொணர்தல் மற்றும் மதிப்பு கூட்டுதல் திட்டத்தின் கீழ் குதிரை வாலி சாகுபடி செய்வதை குறித்து விழிப்புணர்வு பயிற்சி கொரடாச்சேரியில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்ரமணியன் தலைமையில் தடந்தது. பயிற்சியின்போது அவர் பேசியதாவது: தண்ணீர் குறைவாகவும், வறட்சியை தாங்கி நன்கு வளரும் சிறுதானிய பயிரான குதிரைவாலியை சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறலாம் என்றார். கொரடாச்சேரி வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார், விவசாயிகள் சிறுதானிய பயிரிடுவதில் ஆர்வம் காட்டவேண்டும். குதிரை வாலி சாகுபடி செய்ய உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவையில்லை. அதற்காக அதிகம் அலவு செலவு இல்லை என்று தெரிவித்தார். முனைவர் ஜெகதீசன் கூறுகையில், தற்போது சிறுதானிய பயிர்களை பெரும்பாலான மக்கள் விரும்பி உண்பதால் விற்பனை செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. சாகுபடிக்கு மேட்டு பகுதியாக இருக்க வேண்டும் என்றார். முனைவர்கள் கமலசுந்தரி, செல்வமுருகன் ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்தனர்.இதில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முனைவர் சபாபதி நன்றி கூறினார்.

Related Stories: