₹42.40 லட்சம் உண்டியல் காணிக்கை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, நவ.6: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதில், பக்தர்கள் ₹42.40 லட்சத்தை காணிக்கையாக செலுத்தி இருந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக, கடந்த மார்ச் 24ம்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு உத்தரவில் தளர்வு அளிக்கப்பட்டதால், கடந்த செப்டம்பர் 1ம்தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அலங்கார மண்டபத்தில் நேற்று, கோயில் இணை ஆணையர் ஞானசேகர் முன்னிலையில் நடைபெற்றது. தன்னார்வ சேவை பணியாளர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.இதில் பக்தர்கள், உண்டியலில் ₹42 லட்சத்து 40 ஆயிரத்து 99யை காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும், 163 கிராம் தங்கம், 456 கிராம் வெள்ளி ஆகியன காணிக்கையாக கிடைத்தது.

Related Stories: