முதுகுளத்தூரில் வர்த்தக சங்க நிர்வாகிகள் தேர்வு

சாயல்குடி, நவ. 3: முதுகுளத்தூரில் நகர் வர்த்தக சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்தில், கடந்த கால வரவு, செலவு கணக்கு சரிபார்க்கப்பட்டது. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் தலைவராக ராமபாண்டியன், செயலாளராக தவமுருகன், பொருளாளராக முகம்மது இக்பால், கவுரவ தலைவராக கருப்பசாமி, துணைத்தலைவராக முத்துராமலிங்கம், இணைச்செயலாளராக முகம்மதுஜியாவுதீன், ஆடிட்டர் ராஜாகண்ணா, ஆலோசகர்கள், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Related Stories: