கம்பத்தில் 500 ரூபாய் கள்ளநோட்டு புழக்கம் பொதுமக்கள் அச்சம்

கம்பம், நவ. 1: கம்பம், கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு விவசாயத்திற்கு அடுத்தப்படியாக ரெடிமேட் ஆடை உற்பத்தி, மாடு வியபாரம் நடைபெறுவதால் கம்பம் மெட்டு, குமுளி, கட்டப்பனை, நெடுங்கண்டம், வண்டிப்பெரியார் மற்றும் கேரள மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான வியபாரிகள் செல்கின்றனர். மேலும் வாரச்சந்தை மற்றும் உழவர்சந்தைக்கு கேரளா மட்டுமின்றி கம்பத்தை சுற்றியுள்ள கூடலூர், குள்ளப்ப கவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியபாரிகள் வந்து செல்கின்றனர். இதனால் கம்பம் நகர் பரபரப்பாக காணப்படும். மேலும் தற்போது தீபாவளி பண்டிகையொட்டி ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு மர்மநபர்கள் 500 ரூபாய் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விடுகின்றனர். இதனால் பொதுமக்களும். வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கள்ளநோட்டுக்களை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: