திருத்துறைப்பூண்டி நகரில் ஏடிஎம் இயந்திரங்கள் இயங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, அக்.29: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரில் அனைத்து ஏடிஎம் இயந்திரங்களும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளது. திருவாரூர் மாவட்ட நுகர்வேர் பாதுகாப்பு மைய தலைவர் வக்கீல் நாகராஜன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருத்துறைபூண்டி நகரத்தில் உள்ள தேசிய வங்கிகளின் ஏடிஎம்கள் சுலபமாக மக்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் பல ஏடிஎம் இயந்திரங்கள் இயங்கவில்லை. எந்த நோக்கத்திற்காக ஏடிஎம்கள் அமைக்கப்பட்டன, அந்த நோக்கங்கள் நிறைவேறாமல் பொதுமக்கள் நேரடியாக வங்கிகளுக்கு சென்று பணம் கொடுக்க வேண்டியதாக உள்ளது. இதனால் கூட்டம் அதிகமாக உள்ளது.

சமூக இடைவெளி பராமரிக்கப்படவில்லை. கொரோனா நோய்தொற்று பரவி நகரிலுள்ள முக்கிய வங்கிகள் சென்ற மாதத்தில்மூடப்பட்டுவிட்டன. மேலும் தீபாவளி திருநாள் நெருங்குவதால் பொதுமக்கள் அதிக அளவில் வங்கிகளில் இருந்து பணம் படிக்க வேண்டியுள்ளது. இது சம்பந்தமாக பொதுமக்களிடமிருந்து திருவாரூர் மாவட்டம் நுகர்வோர் மையத்துக்கு புகார்கள் வரப்பெற்று உரிய அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டும் நடவடிக்கை இல்லை. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேசிய மற்றும் தனியார் ஏடிஎம்களை முறையாக பராமரிக்கவும் பொதுமக்கள் உபயோகத்திற்கு ஏற்ற வகையில் செயல்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: