நலவாரியம் அமைக்க வேண்டும் ஆடு வளர்ப்போர் வேண்டுகோள்

காரைக்குடி, அக்.23:  காரைக்குடி அருகே மானகிரியில் தமிழ்நாடு ஆடு வளர்ப்போர் இளைஞர் நல சங்க மாநில ஆலோசனை கூட்டம் மற்றும் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. முதுகுளத்தூர் எம்.எல்.ஏ மலேசியா பாண்டியன் தலைமை வகித்தார். முதுவை இளையராஜா துவக்கி வைத்தார். வழக்கறிஞர் காசிராஜன், நிறுவன தலைவர் சாமியாதவ், பொருளாளர் காந்தி, ராம்யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆடுவளர்ப்போர் நலவாரியம் அமைக்க வேண்டும். அதற்கு யாதவர்களை தலைவர்களாக நியமிக்க வேண்டும். அரசு புறம்போக்கு நிலங்களை மேய்ச்சல் நிலமாக ஒதுக்கி தரவேண்டும். வளத்துறை காடுகளில் ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு இலவச பாஸ் வழங்க வேண்டும். வரும் சட்ட மன்ற தேர்தலுக்கு முன்பு ராமநாதபுரத்தில் அனைத்து ஆடுவளர்ப்போர் சங்கத்தையும் ஒருங்கிணைத்து மாநில மாநாடு நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: