பிஎஸ்ஆர் நினைவு மணிமண்டபத்தில் கிளை நூலகம் அமைக்கப்படுமா? நுகர்வோர் மையம் எதிர்பார்ப்பு

திருத்துறைப்பூண்டி, அக்.22: திருவாரூர் மாவட்ட நுகர்வோர் மைய தலைவர் வக்கீல் நாகராஜன் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்தியிருப்பதாவது: காவிரி டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாய கூலி தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக போராடியவர் தியாகி சீனிவாசராவ். அவரது தியாக வாழ்க்கையினை நினைவு கூறுவதற்காக திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அரசால் சுமார் 25 லட்சம் செலவில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பிறந்த நாள், நினைவு நாள் கொண்டாடப் படுகிறது. இந்த சீனிவாசராவ் நினைவு மணிமண்டபத்தில் நூலகமாக அமைத்து பராமரிக்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் நினைவு மணி மண்டபம் திறக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்தது, தற்போது போதிய பராமரிப்பில்லாமல் இருக்கிறது. திருத்துறைப்பூண்டி பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கட்டப்பட்ட நினைவு மணி மண்டபம் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் பூட்டப்பட்டு கிடக்கிறது. நகர மையப்பகுதியில் இருந்தாலும் உபயோகமற்று இருப்பதால் அதனை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதுகுறித்து உரிய அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கை இல்லை. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு நடத்தி சீனிவாசராவ் நினைவு மணி மண்டபத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கிளை மூலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: