குமரியில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ₹100

நாகர்கோவில், அக்.21 :  சமையலுக்கு முக்கியமாக பயன்படும் வெங்காயத்தின் விலை தற்போது உயர்ந்து வருகிறது. கடந்த செப்டம்பரில் ஒரு கிலோ ₹40, ₹60 என்று விற்கப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது ₹100க்கு விற்கப்படுகிறது. இதுபோல் பெரிய வெங்காயம் விலையும் ஒரு கிலோ ₹90, ₹100 என உயர்ந்துள்ளது. இந்த விலை இன்னும் சில தினங்களில் மேலும் அதிகரிக்கும்  என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மும்பை, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கன மழை காரணமாக வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இது போல் பூண்டு மற்றும் காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பூண்டு ₹100, ₹120 என விற்கப்படுகிறது. கேரட் ஒரு கிலோ ₹100ஐ தாண்டியுள்ளது. தக்காளி 4 கிலோ ₹100க்கு விற்கப்பட்டது. வெங்காயம் விலை உயர்வால் நடுத்தர மக்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

Related Stories: