கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை அக்.31 வரை நீட்டிப்பு: கலெக்டர் தகவல்

பெரம்பலூர்,அக்.21: கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதலாமாண் டு மாணவர் சேர்க்கைக்கு வரும் 31ம்தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் அருகேயுள்ள கீழக்கணவாய் அரசு பாலி டெக்னிக்கல்லூரியில் 2020 -2021ஆம் கல்வியாண்டின் முதலாமாண்டு பட்டயப் படிப்பு பயிலும் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு செய்யப் பட்டுள்ளது.

இந்தக் கல்லூரியில் முதலாமாண்டு பட்டய படிப்பு பயிலும் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் முதற்கட்ட கலந் தாய்வு நடத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது ஆன்லைன் மூலம் முதற்கட்ட கலந்தாய் வில் மீதமுள்ள காலியிடங் கள் நிரப்பிக் கொள்ள தொ ழில் நுட்பக்கல்வி இயக்கத் திலிருந்து அனுமதி கிடைக் கப்பெற்றள்ளது. எனவே 10 -ஆம் வகுப்பு முடித்து முதற் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளத் தவறிய மாணவ மாணவியருக்கு அடுத்தக் கட்ட மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தற்போது விநியோகம் செய்ய ப்பட்டு வருகிறது. மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 31ம்தேதி கடை சி நாளாகும். விண்ணப்பக் கட்டணம் ரூ.150 செலுத்த வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.சி, எஸ்.டி. மா ணவர்கள் தங்களது சுய சான்றொப்பமிட்ட சாதிச்சா ன்றிதழ் நகல்களை சமர்ப் பித்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொ ள்ளலாம்.

இந்தக் கல்லூரி விண்ணப்பங்களை சம்ர்ப் பித்தமாணவர்கள் இன சுழ ற்சி மற்றும் மதிப்பெண்அடி ப்படையில் தேர்வு செய்யப் படுவார்கள். கலந்தாய்வு பற்றிய தகவல் தொலைப் பேசி வாயிலாக மாணவர் களுக்கு பின்னர் தெரிவிக் கப்படும். இக்கல்லூரியில் படிப்பதற்கான கல்லூரி கட்டணம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.2,194 மட்டுமே ஆகும். மேலும், இக்கல்லூரியில் சேரும் மாணவர்கள் கல்வி உத வித்தொகை, இலவச பஸ்ப யணச்சலுகை, இலவச மடி க்கணினி மற்றும் அரசு நல திட்டங்கள் அனைத்தையும் பெறலாம். மாணவிகளுக் கு கல்லூரிக்கு அருகில் இ லவச மாணவியர் தங்கும் விடுதியும் மாணவர்களுக் கு கல்லூரி வளாகத்திலே விடுதியும் செயல்பட்டு வரு கிறது. விருப்பமுள்ள மாணவ, மாணவியர் விடுதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 04328-243200 என்றத் தொலைபேசி எண் ணைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள அறி விப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: