அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் அரவக்குறிச்சி பகுதியில்

கரூர், அக். 21: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூர் பேருந்து நிலையத்தில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக அனைத்து தரப்பினர்களும் அவதிப்படுகின்றனர். எனவே பேருந்து நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் தங்கும் விடுதியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அரவக்குறிச்சியில் முருங்கை சாகுபடி அதிகமாக உள்ளதால், அந்த பகுதியில் முருங்கை பவுடர் ஆலை அமைத்து கொடுக்க அரசு அனுமதி வழங்கியும், பயன்பாட்டுக்கு வரமல் உள்ளது. எனவே இதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டையில் வாழை அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே வாழைப்பழ ஜாம் தயாரிக்கும் ஆலையை அரசு அறிவித்துள்ளதால், அதனை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது. கட்டிட தொழிலாளர் சங்கம்: தமிழ்நாடு ஏஐடியூசி கட்டிடத் தொழிலாளர்கள் சங்கத்தின் கரூர் மாவட்ட குழுவின் சார்பில் பொதுச் செயலாளர் வடிவேலன் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் தொழிலாளர்களை பதிவு செய்வதும், ஏற்கனவே பதிவு செய்தவர்கள் பதிவை புதுப்பிப்பது கடந்த ஜூன் மாதம் இணையவழியில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த இணையவழி பதிவுக்கும், புதுப்பித்தலுக்கும் தொழிலாளர்களின் ஆதார் எண்ணும் அதனுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணும் இருந்தால் மட்டுமே இந்த பணிகளை செய்ய முடியும்.

கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களில் பெரும்பாலானோர் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண் உள்ள கைபேசி வைத்திருக்கவில்லை. மேலும், அவர்களிடம் உள்ள கைபேசி எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவில்லை

தொழிலாளியின் கைபேசி எண் ஆதாருடன் இணைத்து இருந்தால் மட்டுமே வாரியத்தால் பதிவு மற்றும் புதுப்பித்தல் சாத்தியம் என்ற நிலையில், ஆதாருடன் கைபேசி எண் இணைக்க கரூர் மாவட்டத்தில் போதுமான இ சேவை மையங்கள் இல்லை. கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், முக்கியமான தபால் நிலையங்கள் போன்ற இடங்களில் மட்டுமே இ சேவை மையங்கள் உள்ளன. இதிலும், குறைவான அளவில்தான் பதிவு செய்து வருகின்றனர். இதனால், நலவாரியங்களில் தொழிலாளர்கள் பதிவு செய்யவோ, புதுப்பிக்கவும் மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது.

எனவே தொழிலாளர்கள், அவரவர்களின் கைபேசி எண்ணை ஆதாருடன் இணைக்க சிறப்பு வழி வகை செய்ய வேண்டும். எனவே, கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் போன்ற பகுதிகளில் இ சேவை மையங்களில் கூடுதல் கம்ப்யூட்டர்கள் அமைத்தும், மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் உதவி மையங்கள் அமைத்தும் எளிதான முறையில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: