கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, அக்.20: கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களுக்கு ரூ.24 ஆயிரம் ஊதியம், உதவியாளருக்கு ரூ.18 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பென்சன் ரூ.9,000 வழங்க வேண்டும். உள்ளூர் மாவட்ட வட்டார பணிமாறுதல் வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர் அனைவருக்கும் மற்ற துறைகளிலும் பதவி உயர்வு வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் நடைபெற்ற ஆபரேஷன் விடுப்பு 10 நாட்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தையடுத்து முக்கிய நிர்வாகிகள் 4 பேர் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சிஐடியூ ரங்கராஜன், மாநில துணைத்தலைவர் பெரியசாமி, பொருளாளர் தேவமணி உள்பட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: