பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் துணிகரம் 2 கடைகளில் மேற்கூரையை பிரித்து ரூ.67 ஆயிரம் செல்போன்கள் திருட்டு

பெரம்பலூர், அக். 20: பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்டில் 2 கடைகளில் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையைப் பிரித்து ரூ.67 ஆயிரம் மதிப்பில் செல்போன்களை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்டில் ஆலம்பாடியை சேர்ந்த முருகேசன்(47) என் பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அருகிலேயே வேப்பந்தட்டையை சேர்ந்த வினோத்குமார்(35) என்பவர் செல்போன் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு இவர்களது கடையின் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளை உடைத்தும், பிரித்தும் உள்ளே இ றங்கிய மர்ம நபர்கள், முருகேசன் பெட்டிக் கடையின் கல்லாவில் வைத்திருந்த ரூ.7 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடியுள்ளனர்.

அதேபோல் வினோத்குமாரின் செல்போன் கடையின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் தலா ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 5 ஆண்ட்ராய்டு மொபைல் போன்கள், 3 சாதாரண செல் போன்கள், 1 ரீசார்ஜ் செய்யக்கூடிய செல்போன் உள்ளிட்ட ரூ.60 ஆயிரம் மதிப்பிலான செல்போன்கள் என மொத்தம் ரூ.67 ஆயிரம் மதிப்பில் பணம் மற்றும் செல்போன்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீ சார் வந்து திருட்டு நடந்த 2 கடைகளிலும் விசாரணை நடத்தினர். நகரில் மிகவும் பரபரப்பாக காணப்படும் பழைய பஸ் ஸ்டாண்டு பகுதியிலேயே 2 கடைகளின் மேற்கூரையை பிரித்து கொண்டு உள்ளே இறங்கி திருட்டு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: