பொய்யூர் கிராமத்தில் பனைவிதை, மரக்கன்றுகள் நடும் பணி

அரியலூர், அக்.20: அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள பொய்யூர் கிராமத்தில் டாக்டர் அப்துல்கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள், மரப்போத்துகள், பனைவிதைகள் நடவு நிகழ்ச்சி மற்றும் சமூகப்பணி செய்தோருக்கு கலாம் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அப்துல்கலாம் அறக்கட்டளை மாவட்ட தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். இதில் சமூகப்பணி ஆற்றிய ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் காவேரி, அறிவியல் ஆசிரியர் செங்குட்டுவன், தலைமை ஆசிரியர் கண்ணகி, அரியலூர் உதவி காவல் ஆய்வாளர் உதயகுமார், மரங்களின் நண்பர்கள் அமைப்பு முத்துக்கிருஷ்ணன் மற்றும் சோலைவனம் அமைப்பினர் உள்ளிட்ட 6 பேருக்கு அப்துல் கலாம் சாதனையாளர்கள் விருது 2020 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், 5 கோடி பனை விதைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தங்க.சண்முகசுந்தரம் கலந்து கொண்டார். விழாவில் 50 மரக்கன்றுகள், பூவரசு, ஆலமரம், உதியன், வாதமுடக்கி மரப்போத்துகள் மற்றும் 1000 பனை விதைகள் நடப்பட்டன.

Related Stories: