கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் எளாவூர் ஏழுகிணறு பகுதி சோதனை சாவடியில் கவரப்பேட்டை போலீசார் நேற்று அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த பாண்டிச்சேரி பதிவு எண் கொண்ட சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, காரின் பின்பகுதியில் பண்டல் பண்டலாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் காரில் இருந்த 3 பேரை ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில், கேரளா மாநிலத்தை சேர்ந்த சக்திவேல்(26), ஜெயச்சந்திரன்(44) மற்றும் மதுரையை சேர்ந்த பாலகிருஷ்ணன்(60) எனத்தெரியவந்தது.