மருத்துவ கல்லூரி கட்டிட பணி ஆய்வு

சாயல்குடி, அக்.2:  ராமநாதபுரத்தில் நடந்து வரும் அரசு மருத்துவகல்லூரி கட்டிடம் கட்டும் பணிகளை மருத்துவ கல்லூரி குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். ராமநாதபுரத்தில் புதிதாக மருத்துவகல்லூரி துவங்க மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் கடந்தாண்டு அனுமதி வழங்கியது. இதற்காக மாவட்ட நிர்வாகம் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் அம்மா பூங்கா அருகே 22 ஏக்கர்  நிலம் ஒதுக்கீடு செய்தது. இந்த இடத்தில் மருத்துவ கல்லூரியும், அரசு தலைமை

மருத்துவமனை வளாகத்திற்குள் புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டவும், வரும் கல்வியாண்டில் முதற்கட்டமாக 150 மருத்துவ பட்டப்படிப்பு  இடம் ஒதுக்கீடும் செய்யப்பட்டது. மருத்துவ கல்லூரிக்கான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த ஆய்வு செய்ய மாநில மருத்துவ கல்லூரிகள் சார்பில் சிறப்பு குழுவினர் நேற்று ராமநாதபுரம் வந்தனர். திருநெல்வேலி மருத்துவகல்லூரி துணை முதல்வர் சாந்தாராம் தலைமையில் ஆய்வு செய்தனர். பின்னர் மாவட்ட அரசு மருத்துவமனை டீன்

மற்றும் மருத்துவ கல்லூரி சிறப்பு அலுவலருமான அல்லியை சந்தித்து ஆலோசனை நடந்தினர். குழு தலைவர் சாந்தாராம் கூறும்போது, இக்கல்லூரியில் நவம்பர் மாதத்தில் 2020-21ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: