புதுக்கோட்டை மாவட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.4.35 கோடி மானியம் வழங்கல் கலெக்டர் தகவல்

3 பேர் கைது

புதுக்கோட்டை, அக்.2: புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:

அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கடையக்குடி ஹோல்ட்ஸ் வொர்த் அணைக்கட்டு ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் நீர் செல்லும் ஷெட்டர்கள் சீரமைப்பு பணி பார்வையிடப்பட்டது. இந்த அணையின் இடதுபுற மதகு வழியாக 12 கண்மாய்களுக்கும், வலது புற மதகுகள் வழியாக 20 கண்மாய்களுக்கும் நீர் செல்லும். இதனால் 5,700க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும் இந்த அணை தற்பொழுது மழைக்காலங்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. எனினும் எதிர்வரும் காலங்களில் காவிரி-வைகை-குண்டாறு திட்டம் நிறைவேற்றப்படும் பொழுது தெற்கு வெள்ளாற்றில் காவிரி நீர் வரும் பொழுது இந்த அணையின் மூலம் முழுவதுமாக பாசன வசதிக்கு பயன்படுத்தப்படும். மாவட்டம் முழுவதும் உள்ள அணைக்கட்டுகள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து கீழப்பனையூர் கிராமத்தில் மண்வளத்தை மேம்படுத்த பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி வயல் பார்வையிடப்பட்டது. மேலும் அரிமளம் வேளாண் விரிவாக்க மையத்தில் பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 87 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு ரூ.4.35 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 56 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்க மூலதன நிதியாக ரூ.2.80 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார். நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: