திருவேங்கடம் கலைவாணி பள்ளியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவேங்கடம், அக். 1:  திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.  தமிழ்நாடு தீயணைப்பு துறை இயக்குநர் சைலேந்திரபாபு, தென்மண்டல துணை இயக்குநர் சரவணக்குமார் உத்தரவின் பேரில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் மகாலிங்கமூர்த்தி, மாவட்ட உதவி அலுவலர் சுரேஷ் ஆனந்த் ஆகியோரின் ஆலோசனைப்படி சங்கரன்கோவில் நிலைய அதிகாரி ஜெயராஜ் தலைமையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.  பேரிடர் காலங்களில் மின்னல் ஏற்படும் போது உயரமான பகுதிகளிலும், மரத்தின் அடியிலும், நீர்நிலைகளுக்கு அருகிலும் நிற்கக் கூடாது. காற்று அதிகமாக வீசும்போது காய்ந்த மரங்களுக்கு அடியில் நிற்கக் கூடாது. லேசான காற்றுக்கே ஒடிந்து விழும் தன்மை கொண்ட மரங்களை வீட்டிற்கு அருகில் வளர்க்க கூடாது.

நில அதிர்வின்போது பில்டிங்கின் நடுப்பகுதியில் இருக்க கூடாது. வெட்ட வெளிக்கு வந்து விட்டால் ஓரளவு பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் போன்ற பல்வேறு அறிவுரைகளை நிலைய அதிகாரி பொதுமக்களுக்கு வழங்கினார்.  நிகழ்ச்சியில் திருவேங்கடம் தாசில்தார் கண்ணன், துணை தாசில்தார் ரவிகணேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் செல்வன் ஜீவா, ஆர்ஐக்கள் மஞ்சுளா, முருகலட்சுமி, கோமதி, விஏஓக்கள் மாரிச்சாமி, ரஞ்சித் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கருப்பையா,  சரவணன், கார்ல்மார்க்ஸ், சந்திரமோகன், கருப்பசாமி, முருகன், செல்வக்குமார், வெள்ளத்துரை, வேலுச்சாமி, தாலுகா அலுவலக முதுநிலை, இளநிலை உதவியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: