கடலூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் திருமாவளவன் எம்பி உட்பட 250 பேர் மீது வழக்கு

கடலூர், செப். 30: கடலூரில் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி உட்பட 250 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் மசோதாக்களை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் நடந்தது.கடலூர் மஞ்சகுப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் எம்.பியுமான திருமாவளவன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.இந்நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, அதிக அளவில் கூட்டம் கூடியது, சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என கடலூர் புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் கொடுத்த புகாரின் பேரில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கடலூர் எம்.பி. ரமேஷ், முன்னாள் எம்எல்ஏக்கள் புகழேந்தி, ஐயப்பன், திமுக நகர செயலாளர் ராஜா உட்பட 250 ேபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: