பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துங்க அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

கம்பம், செப். 30: கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க உத்தமபாளையம் வட்ட கிளை துணைத்தலைவர் குமரன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் முருகன் வளர்மதி, ஜெயமேரி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள், சங்க மாநில பொருளாளர் பேயதேவன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், ‘புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத்துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கான தடையை திரும்பப் பெற வேண்டும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், பாதுகாப்பு தொழிற்சாலைகள், நிலக்கரி சுரங்கங்கள், விண்வெளி அறிவியல், காப்பீடு, வங்கி ரயில்வே உள்ளிட்டவற்றை தனியார் மயமாக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் அரசு ஊழியர் சங்கத்தினர் மற்றும் சத்துணவு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: