கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றிய தூய்மை காவலர்கள் பணியாளர்கள் கவுரவிப்பு

ஊட்டி,ஆக.22:  கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். கூட்டத்தில், ஊராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றிய 612 தூய்மை காவலர்கள் மற்றும் 79 தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில்,கொரோனா தடுப்பு பணியில் தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் சேவை மிகவும் மகத்தான பணியாகும்.தன்னலம் கருதாமல் அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். தூய்மை பணியாளர்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். கபசுர குடிநீர், ஜிங்க் மாத்திரைகள், ஆர்சனிக் ஆல்பம் போன்ற சத்து மாத்திரைகள் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Related Stories: