முள்ளாச்சி மாரியம்மன் கோயில் தெப்ப உற்சவம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 19: திருத்துறைப்பூண்டி நகரில் புகழ் வாய்ந்த முள்ளாச்சிமாரியம்மன் கோயில் 76வது ஆண்டு பெருந்திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் தனி, தனி வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. கடந்த 15ம் தேதி முக்கிய திருவிழா நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு தெளி குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ராஜா, தக்கார் ராமதாஸ், மேலாளர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீஸ்சார் ஈடுபட்டு இருந்தனர். திருவிழா வரும் 22ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

Related Stories: