முன்னெச்சரிக்கை பணி தீவிரம் மாணவர்களுக்கு செமினார் வகுப்பு

தஞ்சை மாவட்டத்தில் உள்ள சில கல்லூரிகளில் விடுமுறையின்றி மாணவர்களுக்கு செமினார் வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கல்லூரிகளில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தால் செய்முறை தேர்வு மட்டுமே நடத்த வேண்டுமென உயர்கல்வித்துறை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார். ஆனால் செய்முறை தேர்வுடன் எழுத்து தேர்வும் நடத்தப்படுவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இதில் கல்லூரி கல்வி இயக்குனர், கல்லூரிகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள், பேராசிரியர்கள் வலியுறுத்தினர். தஞ்சை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காரணமாக நேற்று முதல் டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்கள் மூடப்பட்டன. மேலும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையில் ஈடுபடும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்களுக்கு முககவசம் அணிந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பல இடங்களில் முககவசம் அணிந்து பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: