திருப்புவனம் பூ மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா துவக்கம்

திருப்புவனம் மார்ச் 18:  திருப்புவனம் புதூரில் பூமாரியம்மன் கோயில் உள்ளது. ஆண்டு தோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எங்கிருந்தாலும் பங்குனி திருவிழாவில் பங்கேற்பது வழக்கம். திருவிழாவில் நேர்த்தி கடன் மற்றும் கப்புக்கட்டி  விரதமிருக்கும் பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தி அம்மனை வலம் வருவது வழக்கம்.

ஆயிரம் கண்பானை, மாவிளக்கு, பொம்மை உள்ளிட்ட நேர்த்தி கடனை பக்தர்கள் நிறைவேற்றுவர். இந்தாண்டு பங்குனி திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கொடி மரத்திற்கு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்த பின் இரவு 10 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. விரதமிருக்கும் பக்தர்கள் அம்மனுக்கு முன் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.

Related Stories: