திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு சுகாதார குடிநீர் வசதி

திருச்செந்தூர்,  மார்ச் 18: திருச்செந்தூர் அரசு  மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு  படுக்கை வசதி, சுகாதார குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்துகொடுக்க வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது. திருச்செந்தூரில் தெற்கு மாவட்ட பாமக. செயற்குழு கூட்டம்  நடந்தது. மாவட்டச் செயலாளர் பரமகுரு தலைமை வகித்தார், ஒன்றிய செயலாளர்  மாரியப்பன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் நாட்டாண்மை சிவபெருமாள், மாவட்ட துணைச்  செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட அமைப்புச்செயலாளர் கோபால், இளம்பெண்கள் அமைப்பின் மாவட்டச் செயலாளர் சங்கரி, மகளிர் அமைப்பின் ஒன்றியச் செயலாளர் ரஹமத்பீவி, இளம்பெண்கள் தலைவர் பார்வதி, திருச்செந்தூர் ஒன்றியத் தலைவர் சிவா  முன்னிலை  வகித்தனர். மாநில அமைப்பு துணைத்தலைவர் வள்ளிநாயகம் பேசினார்.

இதில் ஒன்றிய  அமைப்பு தலைவர் பிரபாகரன்,  இளைஞர் அணி ஒன்றியச் செயலாளர் வெங்கடேஷ்,  ஒன்றிய துணைச்செயலாளர் விமல்,  இளைஞர் அணி ஒன்றியத் தலைவர் ஆனஸ், இளைஞர்  அணி நகரத் தலைவர் முனியசெல்வன், ஒன்றிய அமைப்புச் செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர். இதில்  திருச்செந்தூர் அரசு  மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதி, சுகாதாரமான குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்துகொடுக்க வேண்டும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகைதரும் பக்தர்கள் நலன்கருதி, தேவையான அளவுக்கு விடுதிகளை போர்க்கால அடிப்படையில் கட்டிக் கொடுக்க வேண்டும். உருக்குலைந்த திருச்செந்தூர்- சாத்தான்குளம் சாலை உள்ளிட்ட சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  திருச்செந்தூர் நகரச் செயலாளர் செந்தில்முருகன் நன்றி கூறினார்.

Related Stories: