திருச்செங்கோடு, மார்ச் 18:திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர எள் விற்பனை ரகசிய டெண்டர் முறையில் நடந்தது. சின்னசேலம், ஆத்தூர் , கெங்கவல்லி, காங்கேயம், பரமத்தி, நாமக்கல், ராசீபுரம, வீரகனூர், தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 200 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. ரகசிய டெண்டர் முறையில் இந்த எள் 20.50 லட்சத்திற்கு விற்பனையானது.சிவப்பு எள் கிலோ 105.70 முதல் 130.60 வரையிலும், கருப்பு எள் கிலோ 107.90 முதல் 132.60 வரையிலும் விலை போனது. வெள்ளை எள் 101.90 முதல் 124.80 வரையிலும் விற்பனையானது.