கேட்டை மூடி இயங்கும் கல்வி நிறுவனங்கள்

கோவை, மார்ச் 18:  கோவை நகர், புறநகரில் சில கல்வி நிறுவனங்கள் விதிமுறை மீறி செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில்  ஆசிரியர்கள் சிலர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கப்படுவதாக தகவல் வெளியானது. அவினாசி ரோட்டில் சில கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் கேட்டை மூடி இயக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரி விடுமுறை என அறிவிப்பு ஒட்டி வைத்துவிட்டு முறைகேடாக கல்வி நிறுவனங்களை இயங்குவதை பள்ளி கல்வித்துறை, கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகம் கண்டுகொள்ளவில்லை. மாணவர்கள் சிலர் சீருடை இன்றி பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்வதாக தெரியவந்துள்ளது. மாணவ மாணவிகள் விடுதிகளை காலி  செய்ய உத்தரவிட்டும் சில விடுதிகள் தொடர்ந்து இயங்கி வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பை கல்வி நிறுவனங்கள் புறக்கணிப்பதால், கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவல் தடுப்பதில் சவால் ஏற்பட்டுள்ளது.

Related Stories: