குடியிருப்போர் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

திருத்துறைப்பூண்டி, மார்ச் 13: திருத்துறைபூண்டி அருகே உள்ள மேட்டுப்பாளையம் அருள் பவுண்டேஷன் சார்பில் எழிலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் விக்டர் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் இளமதி முன்னிலை வகித்தார். அருள் பவுண்டேஷன் நிறுவனர் பிரசன்னா வரவேற்றார். பயிற்சியாளர்கள் தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருதுபெற்ற ஆசிரியர் செல்வசிதம்பரம் மற்றும் ஆசிரியர் தங்கபாபு ஆகியோர் ஆலோசனை வழங்கினர். பொதுத்தேர்வுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால் காலை வேளைகளில் தினமும் முன்கூட்டியே எழுந்து படிக்க வேண்டும். செல்போன் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதையும் பயன்படுத்துவதையும் தேர்வு எழுதி முடிக்கும்வரை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். கேள்வித்தாளை வாங்கியதும் நன்கு படித்து எழுதுவதற்கு முன் யோசிக்க வேண்டும். தேர்வு எழுதிய பின்பு விடைத்தாளை நன்கு வாசிக்க வேண்டும் என்பன போன்ற அறிவுரைகளை கூறியதோடு மாணவ, மாணவிகளை வைத்து சில எளிய முறை பயிற்சிகளை செய்து காட்டினார். இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர் வெங்கடேஷ் மற்றும் ஆசிரியர்களும், பெற்றோர்கள், மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: