விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி பல்வேறு படிப்புகளில் சேர்ந்து

திருவாரூர். மே 14: பல்வேறு படிப்புகளில் சேர்ந்து ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக வேண்டும் என்று திருவாரூரில் நடந்த கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பொறுப்பு கலெக்டர் சண்முகநாதன் மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தினார். திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், மஞ்சக்குடியில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ப்ரியங்கா, மற்றும் எஸ்பி ஜெயக்குமார், ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் தமிழ்நாடு முதலமைச்சரால், 2022ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நான் முதல்வன் திட்டம், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான விரிவான மற்றும் பயனுள்ள வழிகாட்டுதலை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு முயற்சியாக வளர்ந்து வருகிறது. இந்தத் திட்டமானது சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆதரவுடன் அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய ஏராளமான அரசுப்பள்ளி மாணவர்களின் திறனை அங்கீகரிக்கிறது.

நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து மாணவர்களும் தங்கள் பள்ளிக் கல்வியை முடித்தவுடன் உயர்கல்வி படிப்புகளைத் தொடர வழிவகை செய்வதற்காக அமைந்துள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் மேல்நிலைப்பள்ளி படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் எதிர்கால கனவை நனவாக்கும் வகையில் உயர் கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன. கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது, மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கும். வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்கள் புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களை கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளது.

இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், கல்வியாளர்கள், பேச்சாளர்கள், தன்னார்வலர்களை கொண்டு மாணவ, மாணவிகளுக்கு உங்கள் வாழ்க்கைப் பாதையை எவ்வாறு தேர்வு செய்வது?, பொறியியல் மற்றும் அது சார்ந்த படிப்புகள், மருத்துவப்படிப்புகள், கலை மற்றும் அறிவியல் படிப்புகள், கல்விக் கடன் பற்றிய பேச்சு, வெளிநாடு வாழ் இந்தியர்கள், சட்டம், ஊக்கமளிக்கும் அமர்வு, பாலிடெக்னிக் படிப்புகள், ஐடிஐ படிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இதன் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் 2024ம் ஆண்டில் மேல்நிலைப்பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் பல்வேறு படிப்புகளில் சேர்ந்து அனைவரும் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக விளங்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் கனவுத்திட்டமான நான் முதல்வன் திட்டத்தை வெற்றி பெற செய்திட மாணவ, மாணவிகளிடம் கேட்டு கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, துணை காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) காயத்ரி, முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் சீனிவாசன், சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஹேமா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி பல்வேறு படிப்புகளில் சேர்ந்து appeared first on Dinakaran.

Related Stories: