கறம்பக்குடி வடக்கு, தெற்கு ஒன்றியத்தில் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட திமுகவினர் விருப்ப மனு தாக்கல்

கறம்பக்குடி, மார்ச் 6: கறம்பக்குடி திமுக வடக்கு, தெற்கு ஒன்றியம் சார்பில் கிளை கழக தேர்தலுக்கான விருப்ப மனுக்களை திமுகவினர் வழங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திமுக வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அளவில் கிளை கழக தேர்தலுக்கான விருப்ப மனுக்களை தாக்கல் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது கறம்பக்குடி வடக்கு திமுக ஒன்றியம் சார்பில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக வடக்கு ஒன்றிய நிர்வாகிகள், திமுகவினர் மனுக்களை பெற்று பூர்த்தி செய்து தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்ட பல்லாவரம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கருணாநிதியிடம் வழங்கினர்.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.கே.செல்ல பாண்டியன் மற்றும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ் ராஜா, திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன், நகர செயலாளர் முருகேசன் மற்றும் திமுக வடக்கு ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதே போல கறம்பக்குடி தெற்கு திமுக ஒன்றியம் சார்பில் வெட்டன் விடுதியில் நடை பெற்ற விருப்ப மனுக்களை பெறும் நிகழ்ச்சியில் திமுக தேர்தல் ஆணையர், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர் தவ பாஞ் சாலன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: