மாசிமக பிரமோற்சவத்தையொட்டி தாய் மூகாம்பிகை கோயிலில் பூச்சொரிதல் விழா திரளான பெண்கள் பூக்கள் கொண்டு வந்து வழிபாடு

நாகை, மார்ச் 6: மாசி மக பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நாகை ஆரியநாட்டுத்தெரு தாய் மூகாம்பிகை கோயில் பூச்சொரிதல் விழா நடந்தது. நாகை ஆரியநாட்டுத்தெரு தாய் மூகாம்பிகை கோயில் மாசி மக பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான நேற்று அம்மனுக்கு பூச்சொரிதல் அபிஷேகம் நடைபெற்றது. நாகை துறைமுகம் கடற்கரையில் அமைந்துள்ள அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பூச்சொரிதல் ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பூத்தட்டு ஏந்தியவாறு தாய் மூகாம்பிகை கோயில் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோயிலை சென்றடைந்த பக்தர்கள் அங்கு அம்மனுக்கு பூவால் அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான மாசி மக தீர்த்தவாரி வரும் 9 ம் தேதி நாகை புதிய கடற்கரையில் நடைபெறவுள்ளது.

Related Stories: