வெங்கமேடு 7வது வார்டில் பாதாள சாக்கடைக்கு தோண்டிய இடத்தில் சாலை அமைக்க கோரிக்கை

கரூர், மார்ச் 5: வெங்கமேடு 7வது வார்டில் பாதாள சாக்கடை குழியை 2 மாதமாக மூடாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கரூர் நகராட்சி வெங்கமேடு 7வது வார்டு திட்டச்சாலை மேற்குப் பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக சாலையில் குழிபறிக்கப்பட்டது. பாதாள சாக்கடை தொடர்பான வேலைகள் முடிந்த நிலையில் மண்போட்டு மூடியுள்ளனர். இதனால் தெருவின் நடுப்பகுதியிலும், ஓரப்பகுதியிலும் மணல்மேடிட்டு காணப்படுகிறது. தார்சாலை அமைக்கவில்லை. மேலும் வடிகால்செல்லும் பகுதியும் உடைந்து காணப்படுகிறது. இதனால் இரு சக்கரவாகனத்தில் வீடுகளுக்கு சென்றுவர முடியாமல் பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர். மேலும் அவசர உதவிக்கான வாகனங்களும் சென்றுவர முடியாதநிலை உள்ளது. ஆட்டோக்கள் கூட அவசரத்திற்கு தெருவுக்குள் வந்து செல்ல முடியாத நிலைஉள்ளது. எனவே உடனடியாக பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய இடத்தில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: