புதுகை நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட ஓன்றரை டன் பிளாஸ்டிக் ெபாருட்கள் பறிமுதல்

புதுக்கோட்டை, மார்ச்4: புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் நடத்திஅதிரடி சோதனையில் தடைசெய்யப்பட்ட ஒன்றரை டன் பிளாஸ்டிக் பொருட்களை ஆணையர் பறிமுதல் செய்தார். புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது நகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் பிருந்தாவனம் பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மற்றும் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கடைகளில் பயன்பாடு மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த ஒன்றரை டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள், பறிமுதல் செய்த புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். இந்த ஆய்வின்போது வருவாய் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Related Stories: