கரூரில் இன்று திமுக நெசவாளர் அணி செயலாளர் பரணிமணி இல்ல திருமண வரவேற்பு உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

கரூர், மார்ச் 4: திமுக நெசவாளர் அணி செயலாளர் பரணிமணி இல்ல திருமண வரவேற்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி கே.மணி, சித்ரா மணி ஆகியோரது மகன் சதீஸ்- சஞ்சனா திருமண வரவேற்பு விழா இன்று (புதன்) இரவு 7 மணிக்கு கரூர் சேலம் பைபாஸ்சாலை அட்லஸ் கலையரங்கில் நடைபெறுகிறது. இதில் திமுக மாநில இளைஞர் அணிசெயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகிறார். திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு. துணைபொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர், எம்எல்ஏ செந்தில்பாலாஜி, திருச்சி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்தி பேசுகின்றனர்.

Related Stories: