பெரம்பலூர் நகரில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைத்து தர ேவண்டும்

பெரம்பலூர்,மார்ச்3: பெரம்பலூர் நகரில், ஏற்கனவே அகற்றப்பட்ட வேகத்தடைகளை, பொதுமக்கள் நலன் கருதி விரைந்து அமைத்து த் தரவேண்டும். பெரம்ப லூரில் நடந்த பொதுமக் கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெரம்ப லூர் இளைஞர் இயக்கம் வேண் டுகோள் விடுத்துள்ளது. பெரம்பலூர் கலெ க்டர் அலுவலகக் கூட்ட அர ங்கில், நேற்று காலை பொ துமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் சாந்தா தலைமையில் நடை பெற்றது. பெரம்பலூர் மாவ ட்டவருவாய்அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பெரம்பலூர் இளைஞர்கள் இயக்க ஒருங்கிணைப்பாளரான சத்யா உள்ளிட் டோர் கலெக்டரிடம் அளித்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் நகரில் கடந்த ஆண்டு மேமாதம், தேர்தல் பிரசாரத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வருகை தந்த காரணத்தினால், அகற்றப்பட்ட வேகத்தடைகள் பல மாதங்கள்ஆகியும் இதுவரை மீண்டும் அமைக் கப்படவில்லை.

குறிப்பாக விபத்துக்கள் நேரும் அபாயம் உள்ள பள்ளி, அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களில் அகற் றப்பட்ட வேகத்தடைகள்கூ ட இன்னமும் போடப்படவி ல்லை. அதேபோல் பிரதான சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரின் இருபுறமும் அதிக அளவிலான புழுதி மண் தேங்கி இருபுறமும் மணல் மேடாக காட்சி அளிக்கிறது. அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற வேகத்தடைகளில் அத னை வாகன ஓட்டிகளுக்கு மாலையிலும், இரவிலும் கூட வெளிப்படுத்தும் விதமாக, ஒளிரும் வெள்ளை வர்ணக் கலவை பூச வேண்டும்.துறைமங்கலம் பங்களா ஸ்டாப், பாலக்கரை ரோவர் வளைவு, பாத்திமா பள்ளி, சிவன் கோயில் வளைவு, கடைவீதி, கல்வித்துறை அலுவலகம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அரசு மேல்நிலைப் பள்ளி, தாலுகா அலுவலகம், வட க்குமாதவி சாலை சந்திப்பு, எளம்பலூர் சாலை சந்திப்பு, ஆத்தூர்ரோடு அருகில் போன்ற முக்கிய இடங்களில் வேகத்தடைகளை பொது மக்கள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் அமைத்துத் தரவேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: