டெல்லி சம்பவத்தை கண்டித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்,மார்ச்3:திருப்பூரில், குடியுரிமை சட்டத்தை கண்டித்து போராடியவர்கள் மீது நடத்திய வன்முறை கண்டித்து அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கடந்த இரண்டு மாத்திற்கு முன்னாள் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தாக்கல் செய்தது நிறைவேற்றினர். இந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா இஸ்லாமியர்களுக்கு இலங்கை தமிழர்களுக்கும் எதிரானது என கூறி பல்வேறு இடங்களில் மாணவர்கள், அரசியல் கட்சியினர், உள்ளிட்ட பலதரப்பட்டோர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இதனை கண்டித்தும், குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, உள்ளிட்ட சட்டங்களை வாபஸ் பெறக்கோரியும் திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பின் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுச்செயலாளர் முகமது யாசர் தலைமை வகித்தார். பெரியபள்ளி வாசல் தலைமை இமாம் முப்தி சல்மான் பாரிஸ் பாகவி, தமுமுக மாநில செயலாளர் சாகுல் அமீது, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.

Related Stories: