நெமிலி ஊராட்சி முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா

திருத்தணி, மார்ச் 2 : திருத்தணி அடுத்த நெமிலி ஊராட்சிக்கு உட்பட்டது சந்தான கோபாலபுரம் கிராமம்.  இந்த கிராமத்தில் பெரியாண்டவர் முனீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் கலசங்கள் வைத்து சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டு பெரிய ஆண்டவருக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோயில் வளாகத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.    அப்போது பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருத்தணி மற்றும் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தொழில் அதிபர் ஜெகநாதன் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் செய்திருந்தனர்.

Related Stories: