கும்மிடிப்பூண்டி அருகே திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா

 

கும்மிடிப்பூண்டி, மே 29: சேலியம்பேடு ஊராட்சியில் உள்ள திரவுபதி அம்மன் மற்றும் தர்மராஜா கோயிலில் 6ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அருகே சேலியம்பேடு ஊராட்சி உள்ளது. இங்குள்ள, பள்ளிபாளையம் கிராமத்தில் திரவுபதி அம்மன் மற்றும் தர்மராஜா கோயிலின் 6ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்றுமுன்தினம் நடந்தது. திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 10 நாட்களாக பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடந்தது.

தொடர்ந்து கணபதி ஹோமம், நவச்சண்டியாக பூஜையும், தெருக்கூத்தும் நடைபெற்றது. மேலும், தினந்தோறும் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் கச்சேரிகளும் நடத்தப்பட்டன. பின்னர் காப்பு கட்டிய பக்தர்கள் 300 பேர் வேப்பிலை அணிந்து நாக்கில் அலகு குத்தி ஆலயத்தை வலம் வந்தனர். தீமிதி திருவிழாவில் பக்தர்கள் ஒவ்வொருவராக தீக்குழியில் இறங்கினர். இந்த தீமிதி திருவிழாவை காண கும்மிடிப்பூண்டி தேவம்பட்டு, பொன்னேரி, பெத்திகுப்பம், எளாவூர், சுண்ணாம்புகுளம், மெதிபாளையம், பழவேற்காடு, மீஞ்சூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது திரவுபதி அம்மன் – தர்மராஜா திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த தீமிதி விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளிபாளையம் கிராம மக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர். இந்த தீமிதி திருவிழாவில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியதை தொடர்ந்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் மற்றும் கும்மிடிப்பூண்டி சப் – இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், தனிப்பிரிவு போலீசார் சுரேஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

The post கும்மிடிப்பூண்டி அருகே திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: