நடைபாதை வியாபாரிகளுக்கு தனி இடம்: வட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு

 

கும்மிடிப்பூண்டி, மே 26: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பஜார் பகுதியில் 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பஜாரை ஓட்டி சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் 50க்கும் மேற்பட்ட நடைப்பாதை வியாபாரிகள் காய்கறி கடைகள், பழக்கடை, பூ கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சர்வீஸ் சாலைகளில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதேபோல் எளாவூர் பஜார் பகுதியில் சாலை சீரமைப்பு அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதால் நடைபாதை கடைகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். இதனை தொடர்ந்து, எளாவூர் பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்திலும் எங்கள் பகுதிக்கு நடைபாதை வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்கவும் அதேபோன்று தனி ரேஷன் கடை கட்டி தரவும் மனு அளித்துள்ளனர். இதற்கு அதிகாரிகள் இது சம்பந்தமாக துறை அதிகாரிகள் பரிசீலினை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

The post நடைபாதை வியாபாரிகளுக்கு தனி இடம்: வட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு appeared first on Dinakaran.

Related Stories: