திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் மாசி பிரமோற்சவம்

திருவொற்றியூர், மார்ச் 2: திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயில் மாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்தாண்டு விழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.புனிதநீர், பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு மங்கல பொருட்களை கொண்டு கொடிமரம் சுத்தம் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தியாகராஜர் மாடவீதி உற்சவம் நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் 6ம் தேதியும், கல்யாணசுந்தரர், சங்கிலி நாச்சியார் திருக்கல்யாண வைபவம் 8ம் தேதியும் நடைபெறும். 10ம் தேதி, 18 திருநடனம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெறுகிறது.இவ்விழாவிற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ராதேவி தலைமையில் அலுவலர் மற்றும் ஊழியர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Related Stories: