மணமேல்குடி அரசு பெண்கள் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா

மணமேல்குடி,மார்ச்2:மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழகஅரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது .விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் ராஜராஜேஸ்வரி தலைமை தாங்கினார் .ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா நடேசன் முன்னிலை வகித்தார் .விழாவில் சிறப்பு விருந்தினராக அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி கலந்துகொண்டு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் முத்துக்குமார் ,பள்ளி ஆசிரியர்கள் மாணவிகள் கலந்துகொண்டனர் .முடிவில் உதவி தலைமையாசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார் .

Related Stories: