நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி நிறுவனத்தின் விடுதி விழா

நாகை,மார்ச் 2: நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி நிறுவனத்தின் விடுதி விழா நடந்தது. இதில் நடிகர் தாடி பாலாஜி பங்கேற்றார். நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி நிறுவனத்தின் விடுதி விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி தலைவர் ஜோதிமணி அம்மா முன்னிலை வகித்தார். கல்லூரி செயலர் செவாலியர் முனைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். கலை அறிவியல் கல்லூரி துணை முதல்வர் கலியபெருமாள் வரவேற்றார். இதில் ஓ.எஸ்.மணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து பேசுகையில், கல்லூரி வாழ்க்கையில் விடுதி வாழ்க்கை என்பது சிறப்பு. வாழ்க்கையில் மாணவ, மாணவிகள் படிக்கும் போது அனைவரும் ஒற்றுமையோடு வாழும் இடம் விடுதிதான் என்றார். நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க.கதிரவன், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள யுனிவர்சல் அகாடமி பள்ளி தலைவர்கள் ரவீந்தரன், மகேந்திரன் கலந்து கொண்டனர். மேலும் விடுதி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் விஜய் டிவியின் கலக்க போவது யார் புகழ் நடிகர் தாடி பாலாஜி கலந்து கொண்டார், கல்லூரியின் இயக்குநர் சுமதி பரமேஸ்வரன், கல்லூரி அறக்கட்டனை உறுப்பினர்கள் அருள்பிரகசாம், கோவிந்தசாமி, சங்கர் கணேஷ், கல்லூரி முதன்மை செயல் அலுவலர் சந்திர சேகர், இயக்குநர் விஜயசுந்தரம், பொறியியல் கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சின்னதுரை, கலை அறிவியல் கல்லூரியின் கூடுதல் முதல்வர் முகமது இஸ்மாயில், கல்வியியல் கல்லூரியின் முதல்வர் குமார், துறை தலைவர்கள், விடுதியின் துணை காப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக அலுவர்கள், விடுதி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் பொறியியல் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவி செல்வி அஜித்தா நன்றியுரை கூறினார்.

Related Stories: