பூலாம்பட்டி காவிரியில் விசை படகில் சவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம்

இடைப்பாடி, மார்ச் 2: இடைப்பாடி அருகே பூலாம்பட்டி காவிரியில், விசை படகில் சென்று சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். மேட்டூர் அணையில் இருந்து  டெல்டா பாசனத்திற்கு செக்கானூர்  பூலாம்பட்டி- கோனேரிப்பட்டி ஊராட்சி கோட்டை ஆகிய நீர்மின் கதவணை  வழியாக பவானி, திருச்சி, தஞ்சாவூர் வழியாக தண்ணீர் செல்கிறது.இந்நிலையில், கடந்த மாதம் முதல் தண்ணீ–்ர் திறப்பு நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று பூலாம்பட்டி காவிரியில் சேலம், ஆட்டையாம்பட்டி, கோனேரிப்பட்டி, இடைப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள்,பொதுமக்கள் என பலர் திரண்டனர். விசை படகில் ஆர்வத்துடன் சென்று காவிரியின்  இயற்கை அழகை கண்டு களித்தனர். அதே போல், டூவீலர்களுடன் ஈரோடு வரை படகில் சென்றனர். குறைந்த அளவு தண்ணீர் செல்வதால் மீனவர்கள் வலையில் அதிகளவில் மீன்கள் சிக்குகிறது. இதனால் மீனவர்கள் காலை முதலே மீன்களை பிடித்தனர்.

Related Stories: