இளம்பிள்ளை அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

இளம்பிள்ளை, மார்ச் 2: இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1969-1970ம் கல்வி ஆண்டில், பயின்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு விழ நடந்தது. நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது. விழாவில், முன்னாள் மாணவர்களான கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாகராஜ், கோவை வேளாண்மை கல்லூரி அலுவலர் சித்தேஸ்வரன், ஆடிட்டர் சம்பத்குமார், சதாசிவம், கந்தசாமி மற்றும் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் ஆசிரியர்களான கோவிந்தசாமி, சீனிவாசன், கந்தசாமி, செங்கோடன், நல்லதம்பி, தேவகி உள்ளிட்டோர், முன்னாள் மாணவர்களை பாராட்டி பேசினர். இதனை தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்ச்சியும், விருந்தும் நடைபெற்றது.

Related Stories: