வத்தலக்குண்டு, மார்ச் 2: வத்தலக்குண்டு ஒன்றியத்தில் திமுக கிளைச் செயலாளர்கள் மொத்த விருப்பமனுவை மாவட்ட செயலாளரிடம் வழங்கினர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 ஊராட்சிகளிலும் ஊராட்சி கிளை செயலாளர்கள் விருப்பமனு வாங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கேபி.முருகன் தலைமை வகித்தார். நகர செயலாளர் சின்னத்துரை, பட்டிவீரன்பட்டி நகர செயலாளர் அருண்குமார், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் அப்துல்ஹமீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.