20ம் நூற்றாண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளின் கண்காட்சி வரும் 9ம் தேதி வரை நடக்கிறது: வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் தொடங்கியது

வேலூர், மார்ச் 1: வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் 20ம் நூற்றாண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளின் கண்காட்சி ேநற்று தொடங்கி வரும் 9ம் தேதி வரை நடக்கிறது. தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை சார்பில் 20ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் கண்காட்சி நேற்று தொடங்கியது. அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்ட கருவூல அலுவலர் முத்து.சிலுப்பன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துறைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரிக் கல்வி இயக்கத்தின் வேலூர் மண்டல இணை இயக்குனர் எழிலன் சிறப்பு விருதினராக கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் 20ம் நூற்றாண்டில் இந்திய அறிவியல் அறிஞர்கள், சர்வதேச அறிவியல் அறிஞர்கள், கண்டுபிடித்த பிரிண்டிங் இயந்திரம், காம்பஸ், பேப்பர் கரன்சி, ஸ்டீல், எலக்ட்ரிக் லைட், டிரான்சிஸ்டர், மேக்னிபையிங் லென்ஸ்,

டெலிகிராப், ஆன்டிபயோடிக்ஸ், ஸ்டீம் இன்ஜின் உள்ளிட்ட 11 அறிவியல் கண்டுபிடிப்புகள் மாணவர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 2,000 மாணவர்கள் பார்வையிட்டனர். அப்போது மாணவர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு அறிவியல் இயக்கத்தினர் பதிலளித்தனர். இதுகுறித்து காப்பாட்சியர் சரவணன் கூறுகையில், 20ம் நூற்றாண்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 11 அறிவியல் கண்டுபிடிப்புகளின் கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி வரும் 9ம் தேதி வரை நடைபெறும். மாணவர்களுக்கு அனுமதி இலவசம். காலை 9.30 மணி முதல் மாலை 5 மணிவரை அறிவியல் கண்காட்சியை பார்வையிடலாம், என்றார்.

Related Stories: