காட்டேரி பூங்காவில் மலர் செடிகள் நடவு பணி தீவிரம்

குன்னூர், பிப்.28: நீலகிரி மாவட்டம் குன்னூரில் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் குன்னூர் காட்டேரி பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் உள்ளன. நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் தமிழுகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் காட்டேரி பூங்கா அமைந்துள்ளது. பார்க்க அழகாக உள்ளதால் தினந்தோறும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, திருமணம் ஆன புதுமணத் தம்பதிகள், தேன்நிலவு கொண்டாட வரும் ஜோடிகளுக்கு அவுட் டோர் போட்டோ ஷூட் எடுக்க அதிகளவில் வந்து செல்கின்றனர்.  தற்போது வரக்கூடிய கோடை சீசனுக்காக பூங்கா தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது வருகிறது. இந்தாண்டு சீசனுக்கு 70 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு மலர்களை நடவு செய்ய பூங்கா சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: