காஸ் விலை உயர்வை கண்டித்து சேர்ந்தமரத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சுரண்டை,பிப்.27:  காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மேலநீலிதநல்லூர் வட்டார காங்கிரஸ் சார்பில் சேர்ந்தமரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் எஸ்.பழனி நாடார் தலைமை வகித்தார். வட்டார தலைவர் முருகையா, மாநில பேச்சாளர்கள் பால்துரை, முத்துசாமி, நகர தலைவர் விஜயன், மாவட்ட செயலாளர் டேவிட் துரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாவட்டத்தலைவர் எஸ்.பழனி நாடார், ‘அனைத்து குடும்பங்களையும் பாதிக்கும் வகையில் சமையல் கியாஸ் விலையை உயர்த்திய மத்திய பாஜ அரசு தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கிறது. அத்தியாவசியப்பொருட்களின் விலை உயர்வு, அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்தல், மத நல்லிணக்கத்திற்கு எதிரான செயல்கள் என தொடர்ந்து மக்கள் விரோத போக்கை மத்தியில் ஆளும் பாஜ அரசு செய்துவருகிறது. மத்திய பாஜ அரசின் இந்த செயலுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது’ என்றார்.  

 ஆர்ப்பாட்டத்தில் சுரண்டை நகர தலைவர் ஜெயபால், தெய்வேந்திரன், வட்டார துணைத்தலைவர் வியாகப்பன், ஊடகப்பிரிவு தங்கம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் திருமலைநாதன், மாணிக்கம், மாவட்ட ஓபிசி அணி திருஞானம், விவசாய அணி குரூஸ் மணி, காமராஜ், செங்கோட்டை வட்டார தலைவர் ரத்தினம், சாம்பவர்வடகரை நகர தலைவர் முருகன், சந்தனராஜ், காளிமுத்து,சங்கர்,மாடசாமி,கருப்பசாமி, சேவாதளம் சேர்மக்கனி, மாரியம்மாள், சீனியம்மாள், சங்கரன்கோவில் நகர தலைவர் உமாசங்கர், சுந்தர்ராஜ், கண்ணன், செந்தூர்பாண்டியன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories: